உணர்வுச்சுவடுகள்…

சுயங்களின் சூனியத்தை
சுட்டெரிக்க விரும்பினேன் !
முடியவில்லை என்னால் !
மற்றவர்களுக்காய்…
என் இதழ் விரித்தேன் !
விலகவில்லை…
உன்னில் சிதறிய
என் நினைவுகள் மட்டும்…!
கைப்பிடி இதயத்தை
என்னை இம்சிக்காமல்,
இடம் பெயற்றாயடா ???
நான் வெற்றி பெரறும்போதெல்லாம்,
நீ பிடித்த கரம் !
தோல்விகளால் துவண்டபோதெல்லாம்,
எனைச் சாய்த்துக்கொண்ட
உன் தோள் !

என் கண்ணீரை
இவ்வுலகம் எட்டிப்பார்க்க விடாத
உன் ஸ்பரிசம் !

உடைந்த போதெல்லாம்
என்னை உதிராமல் காத்த
உன் இதழ் !

வேதனிக்கிறேன் !
எனில் விழும்
சிறு கீரலயும் தாங்கீடாத
உன் மனம்….


எனை மறந்து..
என்னுயிர் கிழிதெரறிந்து…
உணர்வுகளை உரித்தெடுத்து
எனை….
உறைபனியாய் விட்டுச்செல்ல
எப்படி சம்மதித்தது,
உனக்கும் எனக்குமான
நம் உணர்வுச்சுவடுகள்…? ? ?

~ by tvammu மேல் மே 15, 2007.

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்